ADDED : நவ 14, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், கிட்ஸ் கிளப் குழுமத்தின் முன்னாள் தலைவர் மோகன்கந்தசாமி, 16ம் ஆண்டு நினைவு நாள் விழா, கிட்ஸ் கிளப் மாத இதழ் வெளியீட்டு விழா, ெஷரீப் காலனி, கிட்ஸ் கிளப் பள்ளியில் நடந்தது.
பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் போட்டி போட்டு, ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். எட்டாம் வகுப்பு மாணவர் படைப்புகள் கிட்ஸ் கிளப் மாத இதழில் வெளியிடப்பட்டது.
கிட்ஸ் கிளப் மாத இதழை பள்ளித் தாளாளர் வினோதினி கார்த்திக் வெளியிட, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

