/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் அபாரம்
/
கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : நவ 23, 2025 06:50 AM

திருப்பூர்: மாவட்ட அளவிலான தடகளப் போட்டி ஐவின் மைதானத்தில் நடந்தது. கிட்ஸ் கிளப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
நீளம் தாண்டுதலில் ரித்விக்சாய் முதலிடம்; ரய்னாஸ்ரீ மூன்றாம் இடம்; 50 மீ. ஓட்டப்போட்டியில் அப்துல்லா மூன்றாம் இடம், பந்து எறிதல் போட்டியில் ரிலா தஹ்சீன் முதலிடம் பெற்றனர்.
மாநில சிலம்பம் போட்டியில் 14 வயதினர் பிரிவில் அக்ஷராஸ்ரீ முதலிடம், 17 வயதினர் பிரிவில் தியாஸ்ரீ முதலிடம் பெற்றனர். யோகா போட்டியில் நயனிலா முதலிடம் பெற்றார்.
வெற்றி பெற்றோருக்கு பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம், நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சண்முகநதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

