ADDED : நவ 25, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகையில், ''பாரதிபுரம், என்.ஜி.ஆர்., ரோடு, ஜி.ஆர்.ஆர்., மஹால் ரோடு ஆகிய பகுதிகளில், 6 நாய்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒரே நாளில் உயிரிழந்துள்ளன. யாரோ திட்டமிட்டு நாய்களுக்கு விஷம் வைத்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. விசாரணை மேற்கொண்டு, நாய்களை விஷம் வைத்து கொன்றவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு பகுதிகளில் இறந்து கிடந்த தெரு நாய்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.