/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன் பள்ளியில் மழலையர் கல்வி துவக்கம்
/
பிரன்ட்லைன் பள்ளியில் மழலையர் கல்வி துவக்கம்
ADDED : ஜூன் 17, 2025 11:37 PM

திருப்பூர்; திருப்பூர், பிரன்ட்லைன் மில்லேனியம் பள்ளியில், மழலையருக்கான பள்ளி துவக்க விழா நடந்தது.
பங்கேற்ற மழலைகள் தங்களின் பிஞ்சு விரலில், அரிசியில், அ, ஆ... எழுதி தங்களின் கல்விப் பயணத்தை துவக்கினர். நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, பள்ளி முதல்வர் லாவண்யா, தலைமையாசிரியை கமலாம்பாள் ஆகியோர் முன்னிலையில், பெற்றோர், குழந்தைகள் பங்கேற்றனர். தலைமையாசிரியருடன் பெற்றோரும் இணைந்து, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் பயிற்றுவித்தனர். பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர், வாழ்த்தி பேசியதுடன், குழந்தைகளுக்கு புத்தகப்பை, புத்தகங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர்.