/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விகாஸ் வித்யாலயாவில் மழலையர் பட்டமளிப்பு
/
விகாஸ் வித்யாலயாவில் மழலையர் பட்டமளிப்பு
ADDED : மார் 31, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'அரும் திறனாளர் விருது - 2025' (Prodigy award) என்ற பெயரில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பொருளாளர் ராதா ராமசாமி குத்துவிளக்கேற்றினார்.
தாளாளர் ஆண்டவர் ராமசாமி பேசினார். மழலையருக்கு பட்டமளிப்பு நடந்தது. வினாடி வினா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு செயலாளர் மாதேஸ்வரன், துணைச்செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முதல்வர் அனிதா நன்றி கூறினார்.