/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் நவராத்திரி விழா பாடல்கள் பாடிய மழலையர்
/
பள்ளியில் நவராத்திரி விழா பாடல்கள் பாடிய மழலையர்
ADDED : அக் 02, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், சரஸ்வதி பூஜை மற்றும் நவராத்திரி விழா நடந்தது. கே.ஜி., பிரிவு மழலையர்கள் சரஸ்வதி அந்தாதி மற்றும் நவராத்திரி பாடல்களை பாடினர்.
சரவண பொய்கை, ஸ்ரீ கிருஷ்ண லீலை, தசாவதாரம், வராகி, மதுரை மீனாட்சியம்மன் கோபுரம், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட கொலு அமைக்கப்பட்டிருந்தது.
விழாவை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களை, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார் மற்றும் பள்ளி முதல்வர் மாலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.