/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காந்தி ஜெயந்தி விழா மாலை அணிவித்து மரியாதை
/
காந்தி ஜெயந்தி விழா மாலை அணிவித்து மரியாதை
ADDED : அக் 02, 2025 10:44 PM

உடுமலை:உடுமலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உடுமலை குட்டை திடலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு, காங்., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இ.கம்யூ., சார்பில், நகர செயலாளர் சித்ரா தலைமையில், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்ரமணியம், கிருஷ்ணசாமி, ரணதேவ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
அதே போல், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வால்பாறை காந்திசிலைக்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மாலை அணிவித்தார். நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பாக பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வால்பாறை நகர காங்.,கட்சி சார்பில், நடைபெற்ற காந்தியடிகளின், பிறந்த நாள் விழா நகர தலைவர் அமீர் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். விழாவில் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் தேவகிருபை உட்பட பலர் பங்கேற்றனர்.