/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நிறுவன அணிகள் கிரிக்கெட் தொடர்; 9ல் துவக்கம்
/
பின்னலாடை நிறுவன அணிகள் கிரிக்கெட் தொடர்; 9ல் துவக்கம்
பின்னலாடை நிறுவன அணிகள் கிரிக்கெட் தொடர்; 9ல் துவக்கம்
பின்னலாடை நிறுவன அணிகள் கிரிக்கெட் தொடர்; 9ல் துவக்கம்
ADDED : ஆக 03, 2025 10:04 PM
திருப்பூர்; பின்னலாடை தொழிலாளர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தி, அவர்களை உற்சாகமூட்டும் வகையில், திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி நிர்வாகம், 'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து, கிரிக்கெட் அணியை உருவாக்கிவைத்துள்ளன. அந்த அணியினர், போட்டிகளில் பங்கேற்று, விளையாடிவருகின்றனர்.கடந்த 2015முதல் இதுவரை, ஆறு கிரிக்கெட் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
'அப்துல் கலாம் சுழற்கோப்பை'க்கான ஏழாவது 'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில், வரும் 9ம் தேதி துவங்குகிறது. நிப்ட்-டீ கல்லுாரியுடன், டெக்னோ ஸ்போர்ட் இணைந்து போட்டி நடத்தப்படுகிறது.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 20 பின்னலாடை உற்பத்தி நிறுவன கிரிக்கெட் அணிகள், மோதுகின்றன. முதலில், 15 ஓவர்களுடன் லீக் போட்டிகளும்; காலிறுதி முதல், 20 ஓவர்களுடன் 'நாக்-அவுட்' முறையிலும் போட்டிகள் நடைபெறும். லீக், காலிறுதி, அரையிறுவையை தொடர்ந்து, இறுதிப்போட்டிகள், வரும் நவம்பர் 9ம் தேதி நடைபெறும்.
கிரிக்கெட் தொடரில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அப்துல் கலாம் சுழற்கோப்பை; இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை; மூன்று மற்றும் நான்காமிடம் பிடிக்கும் அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.