ADDED : ஏப் 26, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை, திருப்பூரில் நடைபெற்றது. காங்., கமிட்டி சார்பில், ராக்கியாபாளையம் பிரிவில் நடந்த நிகழ்வில், கவுன்சிலர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
வார்டு தலைவர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள், ஹாஜா, ரத்தினமூர்த்தி, முகமது ஹசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, பலியானவர்க ளின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தினர்.

