/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு பன்னாட்டு வர்த்தக அமைப்பு கண்காட்சி திருப்பூரில் துவங்கியது
/
கொங்கு பன்னாட்டு வர்த்தக அமைப்பு கண்காட்சி திருப்பூரில் துவங்கியது
கொங்கு பன்னாட்டு வர்த்தக அமைப்பு கண்காட்சி திருப்பூரில் துவங்கியது
கொங்கு பன்னாட்டு வர்த்தக அமைப்பு கண்காட்சி திருப்பூரில் துவங்கியது
ADDED : டிச 27, 2025 07:55 AM

திருப்பூர்: கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாசார நிறுவனம் (கிட்கோ) சார்பில், கொங்கு வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாட்டில், 'கொங்கு நாட்டு பொருட்காட்சி', திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள ஸ்ரீவேலாயுதசாமி திருமண மண்டப வளாகத்தில் நேற்று துவங்கியது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். 'கிட்கோ' அமைப்பின் இயக்குனர் பாலசுப்ரமணியம், எம்.எல்.ஏ. ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
இக்கண்காட்சியில், இயற்கை வேளாண் விளை பொருட்கள்; தென்னை சார்ந்த தென்னீரா உற்பத்தி மையம்; இயற்கை பானம் தயாரிப்பு; உவர்ப்பு நீரை சுத்திகரிக்கும் கருவி; விவசாய கிணறு மற்றும் ஆழ் துளை கிணறு மோட்டார்; சொட்டு நீர்ப் பாசனம் உபகரணங்கள்; சோலார் மின் உற்பத்தி கலன்கள்; பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் இங்கு அரங்கு அமைத்துள்ளன.
இது தவிர கொங்கு பகுதியைச் சேர்ந்த சுய தொழில் மற்றும் சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் தங்கள் விற்பனை பொருட்களின் அரங்குகளையும் அமைத்துள்ளனர்.
கண்காட்சி நாளை( 28ம் தேதி) வரை மூன்று நாள் நடைபெறுகிறது.
அனுமதி இலவசம். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கண்காட்சி குழுவினர், 'கிட்கோ' மற்றும் கொங்கு வர்த்தக கூட்டமைப்பினர் செய்துள்ளனர்.

