/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை
/
கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை
ADDED : நவ 18, 2025 04:23 AM

திருப்பூர்: ஊத்துக்குளி பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் தேசிய அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தேசிய பெண்கள் எறிபந்து போட்டி நடந்தது. இதில், தமிழக அணியில், கொங்கு பள்ளி மாணவியர் அனிஷா, சஷ்ரிகா, தனவித்யா, யாழினி இடம் பெற்று, மூன்றாமிடம் பெற்றனர். மாணவர் அணியில் பிளஸ் 2 மாணவர் தர்ஷன் நான்காமிடம் பெற்றார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், 'அறிவியல் பெண்கள்' என்ற அறிவியல் நாடக விழாவில், கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவியர் நாடகம் மாநில அளவில் தேர்வானது. இதன் மூலம் வரும் 20, 21ம் தேதி பெங்களூரு, விஷ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தில் நடக்கும் தென்னிந்திய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நடந்த பேச்சு போட்டியில், பிளஸ் 1 மாணவி சஷ்ரிகா மூன்றாமிடம், சென்னை, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த அடல் டிங்கரின் இன்னோவேஷன் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தல் போட்டியில், 9ம் வகுப்பு மாணவர் அஜய், ஆர்னவ் அறிவியல் படைப்பு, மாநில அளவில் முதலிடம் பெற்றது.
சென்னை வேதா அகாடமி நடத்திய ஆங்கில கையெழுத்து போட்டியில் பிளஸ் 1 மாணவி வர்ஷினி, 2வது இடம் பெற்றார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களை பள்ளி தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், தாளாளர் பாலசுப்பிரமணியம், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் பாராட்டினர்.

