/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகோதயா எறிபந்து போட்டி: விவேகானந்தா அகாடமி அசத்தல்
/
சகோதயா எறிபந்து போட்டி: விவேகானந்தா அகாடமி அசத்தல்
சகோதயா எறிபந்து போட்டி: விவேகானந்தா அகாடமி அசத்தல்
சகோதயா எறிபந்து போட்டி: விவேகானந்தா அகாடமி அசத்தல்
ADDED : நவ 18, 2025 04:18 AM

திருப்பூர்: காங்கயம், காடையூர் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்பு சார்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான எறிபந்து போட்டி நடந்தது.
இதில், கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த, பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து,450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளை பள்ளியின் நிர்வாக தலைவர் ராமச்சந்திரன், முதல்வர் பத்மநாபன் துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிக்கு பரிசு, சுழற்கோப்பை, சான்றிதழ்களை விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியின் செயலாளர் சுப்ரமணியம் வழங்கி, பாராட்டினார்.