/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்கேட்டிங் டிராபி போட்டி மைதானம் திறப்பு விழா
/
ஸ்கேட்டிங் டிராபி போட்டி மைதானம் திறப்பு விழா
ADDED : நவ 18, 2025 04:17 AM

திருப்பூர்: ரோட்டரி திருப்பூர் செலிபரேஷன் சார்பில், பள்ளி களுக்கு இடையிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் டிராபி போட்டி பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
பள்ளியில், 100 மீட்டர் ஸ்கேட்டிங் மைதானத்தையும், போட்டியையும் பள்ளி தாளாளர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவின் ஒரு பகுதி யாக, ஹாஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சதீஷ்குமார், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சிவக்குமார், துணை தலைவர் மணிகண்டன், எக்ஸ்கியூட்டிவ் தலைவர் வெங்கடேஷ், மெல்வின் பாபு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பழங்குடி இன மக்களின் நலத்துக்கான நிதியாக, லோகநாதன் மற்றும் ஆறுமுகத்திடம் வழங்கினார்கள்.
மேலும், ரோட்டரி சார்பில், உருவாக்கப்பட உள்ள, நுாறு வீடுகளில், ஒன்றிற்கான நிதி உதவியும், இந்நிகழ்வில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

