/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறப்பு
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறப்பு
ADDED : அக் 04, 2024 12:33 AM

திருப்பூர் : கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி சுறுசுறுப்பாகியுள்ளது. புத்தாண்டுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் திறந்து செயல்பாட்டுக்கு வர உள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு மாற்றாக, கோவில்வழியில் தென்மாவட்டத்தில் இருந்து வரும் பஸ்களுக்கான பிரத்யேக பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி கடந்த, 2023 ஜூன் மாதம் துவங்கியது. 26 கோடி ரூபாய் செலவில், 14 பஸ் ரேக், 15 கடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, போலீஸ் அவுட்போஸ்ட், நேரக்காப்பாளர் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
வளாகத்தின் முதல்தளத்தில் பயணிகள் பொருட்கள் பாதுகாப்பு அறை, அறிவிப்பு மையம், கேமரா பதிவு கண்காணிப்பு அறை, நிர்வாக அலுவலகம், ஏ.டி.எம்., அறை, தாய்மார் பாலுாட்டும் அறை, ஊழியர் அறையும் அமையவுள்ளது.
கட்டுமான பணி, முன்புற நுழைவு வாயில் 'ஆர்ச்' அமைக்கும் பணி முடிந்த நிலையில், இன்னமும் சுவர்களுக்கு பூச்சு வேலை மட்டுமே பாக்கியுள்ளது. இப்பணிகள் அடுத்த இரு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, புத்தாண்டுக்கு முன்பாக பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா காண உள்ளது.

