/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
16ல் கே.எஸ்.சி., பள்ளி நுாற்றாண்டு விழா
/
16ல் கே.எஸ்.சி., பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : பிப் 08, 2025 06:24 AM
திருப்பூர்; கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா வரும் 16ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை துவக்கியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நுாற்றாண்டு கடந்து செயல்பட்டு வரும் பள்ளிகளில் நுாற்றாண்டு விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில், 1918ல் துவங்கப்பட்டு, 108 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது, திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி.
இப்பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மாவட்ட கல்வித்துறை, முன்னாள் மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியர் சிவகுமார் மற்றும் ஆசிரியர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வரும், 16ம் தேதி மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை விழா நடத்தப்பட உள்ளது.