/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எஸ்.சி., அரசுப்பள்ளி மேம்படுத்த ஆலோசனை
/
கே.எஸ்.சி., அரசுப்பள்ளி மேம்படுத்த ஆலோசனை
ADDED : பிப் 05, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்டு நுாறு ஆண்டுகளாகிறது. இதையொட்டி பள்ளி வளாகம் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாடு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து பள்ளி வளாகத்தில் மேயர் தினேஷ்குமார், வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய வகுப்பறை, விளையாட்டு மைதானம், கழிப்பிடம், கலையரங்கம், சுத்திகரித்த குடிநீர் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கான விவரங்கள், செலவினங்கள் ஆகியன குறித்த விளக்கமான அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.