/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குற்ற செயல்களை தடுத்த 41 போலீசுக்கு பாராட்டு
/
குற்ற செயல்களை தடுத்த 41 போலீசுக்கு பாராட்டு
ADDED : அக் 01, 2024 12:10 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி குற்ற செயல்களை தடுத்த, 41 போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி எஸ்.பி., பாராட்டினார்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றங்களை தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அன்றாடம் சுழற்சி முறையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில், இவ்வாரத்தில் பகல் மற்றும் இரவு ரோந்துகளின் போது சிறப்பாக பணியாற்றி, குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, போதை பொருள் விற்றவர்களை கைது செய்தது.
நிலுவையில் இருந்த கோர்ட் வாரண்டுகளை நிறைவேற்றியது, நிலுவை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்தது என, பல்வேறு அடிப்படைகளில், இரண்டு இன்ஸ்பெக்டர், ஏழு எஸ்.ஐ., மற்றும் 32 பேலீசார் உட்பட, 41 பேரை திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.