/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விருது பெற்ற குமரலிங்கம் அரசு பள்ளிக்கு பாராட்டு
/
விருது பெற்ற குமரலிங்கம் அரசு பள்ளிக்கு பாராட்டு
ADDED : ஜூலை 08, 2025 08:51 PM
உடுமலை; குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, மாநில அரசின் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.
பள்ளி வளாகம், சுற்றுச்சூழல், மாணவர்களின் கற்றல் திறன் உட்பட பல்வேறு நிலைகளின் அடிப்படையில், மாவட்டத்துக்கு ஒரு அரசு உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிக்கு பேராசிரியர் அன்பழகன் விருது மாநில அளவில் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் கட்டமைப்பு, பன்முக திறன் வளர்ச்சி, சமூக பங்களிப்பு, பள்ளிகளில் கழிவுநீர் மேலாண்மை வாயிலாக, பள்ளி வளாகம் பசுமைக்குடிலாக மாற்றப்பட்டிருப்பது, போட்டிகளில் பல்வேறு பரிசுகள் பெற்றிருப்பது அடிப்படையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற தலைமையாசிரியர் மாரியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து, நேர்முக உதவியாளர்கள், துணை ஆய்வாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.