ADDED : அக் 19, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறுமைய அளவிலான கால்பந்து போட்டிகள், கடந்த மாதம் திருப்பூரில் நடந்தன.
மாவட்ட அளவிலான இறுதிப்போட்டியில் பல்லடம் கால்பந்து அணி, உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி கோப்பையை கைப்பற்றியது. பல்லடம் கால்பந்து அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. தமிழ்ச் சங்கத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிக்கு கேடயம் மற்றும் கால்பந்து வழங்கினார். வெற்றி பெற்ற பல்லடம் அணி, மாநில போட்டியில் பங்கேற்க உள்ளது.