/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மஸ்ஜித் சேவை குழுவுக்கு பாராட்டு
/
மஸ்ஜித் சேவை குழுவுக்கு பாராட்டு
ADDED : அக் 01, 2024 12:09 AM

திருப்பூர் : மாவட்ட மஸ்ஜித் சேவைக்குழு சார்பில், சிறப்பாகப் பணியாற்றிய குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட மஸ்ஜித் சேவைக்குழு கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஸ்வரா நகரில், சேவைக்குழுவில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கு பாராட்டி பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மஸ்ஜிதே ஹஜ்ரத் பிலால் பள்ளி வாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பள்ளி வாசல் தலைவர் ஜாக்கில் அஹமது தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட சேவைக்குழு தலைவர் ஈசா சாதிக் அலி சேவைப் பணிகள் குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக சையது இப்ராகிம் கலந்து கொண்டு பாராட்டு கேடயங்களை வழங்கினார்.இதில் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, மேட்டுப்பாளையம், தாராபுரம் பகுதியினர் கலந்து கொண்டனர்.