/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய திறனாய்வு தேர்வில் வென்ற உடுமலை மாணவருக்கு பாராட்டு
/
தேசிய திறனாய்வு தேர்வில் வென்ற உடுமலை மாணவருக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில் வென்ற உடுமலை மாணவருக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில் வென்ற உடுமலை மாணவருக்கு பாராட்டு
ADDED : மார் 05, 2024 11:26 PM

உடுமலை:தேசிய திறனாய்வுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கும், மேல்நிலை வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்வதற்கும், தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் சந்தோஷ் கண்ணா வெற்றி பெற்றுள்ளார்.
மாணவரையும், பயிற்சி அளித்த ஆசிரியரையும் பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர், பள்ளி மேலாண்மைக்குழுவினர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.