/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடுகுடுப்பைக்கார 'கெட்டப்' தி.மு.க., பேச்சாளர் பிரசாரம்
/
குடுகுடுப்பைக்கார 'கெட்டப்' தி.மு.க., பேச்சாளர் பிரசாரம்
குடுகுடுப்பைக்கார 'கெட்டப்' தி.மு.க., பேச்சாளர் பிரசாரம்
குடுகுடுப்பைக்கார 'கெட்டப்' தி.மு.க., பேச்சாளர் பிரசாரம்
ADDED : பிப் 10, 2024 01:23 AM

திருப்பூர்:குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் தாராபுரத்தில் தி.மு.க., தலைமைக்கழக பேச்சாளர் பிரசாரம் செய்தது வினோதமாக இருந்தது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த தெக்கலுார், குப்புச்சிபாளையம் பகுதியில் கடந்த இரு நாட்களாக சிவப்பு நிற பனியன் மற்றும் வேட்டி அணிந்த படி, கழுத்தில், பாசிமணி மாலை, தோளில் ஜோல்னா பை, கையில் குடுகுடுப்பையுடன் ஒருவர், 'வாக்கு' சொல்லியவாறு சென்று கொண்டிருந்தார்.
குறி சொல்லும் நபராகவும் தெரியவில்லை; சொல்லும் விஷயமும் வினோதமாக இருக்கிறதே என்று நினைத்து நெருங்கிப் பார்த்தால் தான், அவர் குறி சொல்லும் நபர் வேடமணிந்து, தேர்தல் பிரசாரம் செய்து வரும் தி.மு.க., தலைமைக்கழக பேச்சாளர் என்பது தெரிந்தது.
இதே 'கெட்டப்'பில் கடந்த வாரம் ஈரோட்டில் பிரசாரத்தை துவங்கிய, சேலத்தைச் சேர்ந்த கோவிந்தன் கடந்த இரு நாட்களாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தனது நுாதன பிரசாரத்தை மேற்கொண்டார்.'லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் தான் எல்லா தொகுதிலயும் ஜெயிப்பாங்க... முதல்வர் ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க... அமைச்சர் உதயநிதி சொல்லும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க... உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க... ஜெக்கம்மா சொல்றா... ஜெக்கம்மா சொல்றா... அந்த கட்சி கூட்டணி தான் ஜெயிக்கப் போகுது' என்று பிரசாரம் செய்தவாறு 'குடுகுடுப்பை' அடித்துக் கொண்டே சென்றார்.
சில பகுதிகளில் தி.மு.க.,வினர் அவருடன் சென்று வீதிவீதியாக இந்த பிரசாரத்தில் ஈடுபட்டனர். 'இப்படியும் கூடவா பிரசாரம் செய்வாங்க' என்று பொதுமக்கள் பலர் கூறினர்.