/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய விளையாட்டு போட்டி குமரலிங்கம் அரசு பள்ளி வெற்றி
/
குறுமைய விளையாட்டு போட்டி குமரலிங்கம் அரசு பள்ளி வெற்றி
குறுமைய விளையாட்டு போட்டி குமரலிங்கம் அரசு பள்ளி வெற்றி
குறுமைய விளையாட்டு போட்டி குமரலிங்கம் அரசு பள்ளி வெற்றி
ADDED : ஆக 28, 2025 11:13 PM
உடுமலை, ; குறுமைய விளையாட்டு போட்டிகளில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
உடுமலை பகுதியில், பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான குறுமைய விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களை உள்ளடக்கி உடுமலை குறுமைய போட்டி நடந்தது.
இப்போட்டியில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
மாணவியருக்கான கபடி போட்டி, சதுரங்கம், கேரம் போட்டி, தடகளத்தில் 100 மீ தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், 110 மீ தடை தாண்டுதல், கோலுான்றி தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கும், இப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடந்தது.
விழாவில், பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயராகவன், சலுகாமா, சந்திரபாபு உள்ளிட்டோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.