sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குமரலிங்கம் காசி விஸ்வநாதருக்கு வரும் 30ல் கும்பாபிேஷகம்

/

 குமரலிங்கம் காசி விஸ்வநாதருக்கு வரும் 30ல் கும்பாபிேஷகம்

 குமரலிங்கம் காசி விஸ்வநாதருக்கு வரும் 30ல் கும்பாபிேஷகம்

 குமரலிங்கம் காசி விஸ்வநாதருக்கு வரும் 30ல் கும்பாபிேஷகம்


ADDED : நவ 14, 2025 09:20 PM

Google News

ADDED : நவ 14, 2025 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில், அமராவதி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த காசி விசாலாட்சியம்மன் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலும், அருகில், தத்தாத்ரேய சுவாமி கோவிலும் அமைந்துள்ளன.

கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக விழா வரும், 25ம் தேதி, காலை, 7:00 மணிக்கு மேல் மங்கள இசையுடன் துவங்குகிறது. பின்னர் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

வரும், 26ம் தேதி சாந்தி ேஹாமம், திசா ேஹாமமும், வரும் 27ம் தேதி காலை, 8:00 மணிக்கு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், வரும், 28ம் தேதி இரண்டாம் கால யாக வேள்வி துவங்குகிறது.

வரும், 30ம் தேதி அதிகாலை ஆறாம் கால யாக வேள்வி துவங்குகிறது. காலை, 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் அனைத்து பரிவார விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

காலை, 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், விசாலாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் தத்தாத்ரேய சுவாமிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us