/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர்: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி
/
இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர்: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி
இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர்: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி
இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர்: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : நவ 14, 2025 09:18 PM

உடுமலை: அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும், சீரமைக்கப்படாததால், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
உடுமலை நகராட்சி யு.கே.சி., நகரில், நகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதி குடியிருப்புகளை சேர்ந்த, குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகில், தமிழக அரசின் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அருகில் இருந்த பள்ளி சுற்றுச்சுவர் ஒரு பக்கத்தில் இடிக்கப்பட்டது. திறப்பு விழாவின் போது வாகனங்கள் வந்து செல்லவும், கட்டுமான வாகனங்கள் செல்லவும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் இதுவரை கட்டப்படவில்லை.
இதனால், இரவு நேரங்களில், பள்ளி வளாகம் சமூக விரோத மையமாக மாற்றப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.