/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை நுாலிழை இறக்குமதி தர கட்டுப்பாடு ரத்து: சரியான நேரத்தில் சரியான முடிவு என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ADDED : நவ 14, 2025 12:16 AM

திருப்பூர்: செயற்கை நுாலிழை மீதான இறக்குமதி தர கட்டுப்பாடுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சி பெறும் என, இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் அறிக்கை:
மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருட்களான பாலியெஸ்டர் இழை மற்றும் நுால் மீதான தர கட்டுப்பாடுகளை நீக்க, மத்திய அரசிடம் ஏ.இ.பி.சி. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதனடிப்படையில், செயற்கை இழை மீதான தர கட்டுப்பாடு ஆணைகள் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மத்திய அரசு, சரியான நேரத்தில், நல்ல முடிவை எடுத்துள்ளது. இதற்காக, பிரதமர் மோடி மற்றும் வர்த்தக அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கிறோம். உலகளாவிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வர்த்தக சந்தையில், இந்தியாவின் போட்டியிடும் திறனை மேம்படுத்துவதற்கு, அரசின் இந்த நடவடிக்கை மிக முக்கியமான படியாக அமையும்.
இந்திய ஏற்றுமதியாளர்கள், மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்புக்கு தேவையான பிரதான மூலப்பொருளான செயற்கை நுாலிழைகளை, உலகளாவிய போட்டி விலையில் பெறமுடியும். இதனால், மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு சங்கிலித்தொடரில் உள்ள நிறுவனங்களுக்கு, குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வலுவான உத்வேகத்தை வழங்கும். 100 பில்லியன் டாலருக்கு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி என்கிற லட்சியத்தை அடைவதற்கும் கைகொடுக்கும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.