ADDED : அக் 23, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுப்புதுார் பரமசிவன் கோவிலில் உள்ள மந்திரகிரி வேலாயுதசுவாமிக்கு கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது.
மந்திரகிரி வேலாயுத சுவாமிக்கும், சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீ அருணகிரிநாதருக்கும், 108 வலம்புரி சங்காபிஷேகம் சிறப்பாக நடந்தது. காலையில், விநாயகர் வழிபாடுடன் துவங்கி, சங்கு ஆவாஹனம், யாக வேள்வி, பூர்ணாகுதி, சங்கு அபிஷேகம், மஹா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

