உடுமலை:உடுமலை அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
உடுமலை முத்தையா பிள்ளை லே அவுட்டில் உள்ள, அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் கோவில் மகாகும்பாபிேஷக விழா, யாகசாலை பூஜைகள் இன்று மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது.
நாளை காலை, 7:00 மணிக்கு மகாலட்சுமி ேஹாமம், கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை நடக்கிறது.
வரும் 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, பரிவார சுவாமிகள், மூலாலய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு 3ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.
வரும் 26ம் தேதி காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகளும், காலை, 9:00 மணிக்கு சக்தி விநாயகர், ஸ்ரீ முருகப்பெருமான், அகிலாண்டேஸ்வரி அம்பிகை உடனமர் சோழீஸ்வர சுவாமிக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.