ADDED : ஜூலை 07, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி பகுதியில் உள்ள முத்து நகரில், முத்துவிநாயகர் கோவில் உள்ளது. கும்பாபிேஷகம் நடைபெற்று 12 ஆண்டுகளாகிறது. இதையொட்டி 12வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சொல்காத்தம்மன் கோவிலிருந்து பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
நேற்றுமுன்தினம் காலை கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் ஆகியன நடந்தன. தொடர்ந்து விநாயக பெருமானுக்கு தீர்த்த அபிேஷகம், பல்வேறு திரவியங்களால் அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியன நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.