/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காம்பிலியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
காம்பிலியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 29, 2025 07:06 AM
திருப்பூர்:
பல்லடம், வே.கள்ளிப்பாளையம் காம்பிலியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா, நாளை (30ம் தேதி) நடைபெறுகிறது.
வேளராசிக் குழாயர் குல தெய்வமாகிய காம்பிலியம்மன் கோவில், பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோவில், கடந்த 12 ஆண்டுகள் முன் புனரமைக்கப்பட்டது; ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் செய்து கும்பாபிேஷக விழா நடக்கிறது.
பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளை குமரலிங்கம் குழுவினர், யாக வேள்வி பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த, 27ம் தேதி, தீர்த்தக்குடம் ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, யாகசாலை வேள்வி பூஜைகள் துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் மூன்றாம்கால வேள்வி பூஜை நடக்கிறது.
நாளை காலை, 6:00 மணிக்கு, விநாயகர், முருகர் மற்றும் பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷகம்; காலை, 7:00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை, காலை, 9:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிேஷகம் விழா நடக்கிறது.
காலை, 9:45 மணிக்கு, மூல மூர்த்திகள் கும்பாபி ேஷகமும், ஆன்மிக பெரியோரின் அருளுரையும், சிறப்பு அபிேஷகம், பதின்மங்கல காட்சிகளும், தீபாராதனை, திருமுறை விண்ணப்பமும், அன்னதானம் நடக்க உள்ளது.
கடந்த, 26ம் தேதி மாலை, அழகுமயில் வள்ளி கும்மியாட்ட குழுவின் கலை நிகழ்ச்சியும், 27ல் வேளராசி கலைக்குழுவின் வள்ளி கும்மி நிகழ்ச்சியும், நேற்று, தென்சேரிமலை மாரிமுத்து அடிகளார் பள்ளி குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சியும், பவளக்கொடி கும்மியாட்ட குழுவினர் கலை நிகழ்ச்சியும் நடந்தது.

