/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காசி விநாயகர் கோவிலில் மே 23ல் கும்பாபிேஷகம்
/
காசி விநாயகர் கோவிலில் மே 23ல் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 11, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீகாசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதியில் உள்ளது.
கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மராமத்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகளை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, விஜயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
''வரும் மே 23ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.31 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்'' என தெரிவித்தனர்.
இக்கோவில் கும்பாபிஷேகம், 36 ஆண்டுகள் முன்பு நடைபெற்றது.