/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்
/
பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்
ADDED : மே 12, 2025 11:55 PM
உடுமலை, ; உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பழமையான இக்கோவில், முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, அர்த்த மண்டபம், மஹாமண்டபம், கருடாழ்வார் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, இரண்டு நிலை கோபுரம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் நிறைவு பெற்று, கடந்த 9ம் தேதி கும்பாபிேஷக விழா துவங்கியது. விழாவையொட்டி நான்கு கால யாக பூஜைகளும், சிறப்பு ேஹாமங்களும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் கும்பாபிேஷகம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாளைசோமவாரப்பட்டி சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.