/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : டிச 14, 2024 11:34 PM

திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் கும்பாபிேஷக விழா இன்று நடைபெறுகிறது.
திருப்பூர் ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, துவாரகமாயி துனி, தியான மண்டபம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. இன்று மஹா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.
முகூர்த்தக்கால் நடுதல், ஸ்ரீசாய் மஹால் புண்ணியவாசம் செய்யும் நிகழ்ச்சி 5ம் தேதி நடந்தது. கடந்த, 12ல், பவளக்கொடி கும்மி ஆட்டமும், பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜையுடன், 13ம் தேதி கும்பாபிேஷக விழா துவங்கியது.
கணபதி வேள்வி, நவக்கோள் வழிபாடு, திருமகள் வழிபாடு, முதல்கால வேள்வி பூஜைகள் நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தன. நேற்று காலை இரண்டாம்கால வேள்வியும், மாலை மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. முன்னதாக, கோபுர கலசம் வைத்து, திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
நேற்று மாலை, மஹாராஷ்டிரா சாய்பீடம் தலைமை குருக்கள் திகம்பர் குல்கர்னி தலைமையில், ஸ்ரீசத்ய நாராயண பூஜை நடந்தது. தொடர்ந்து, முத்து சிற்பியின், முத்தமிழ் ராகங்கள் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், இன்று காலை, 4:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜையும், காலை, 6:15 மணி முதல், 6:30 மணிக்குள், பரிவாரங்கள், கோபுர கலசம் மற்றும் மூலாலய மூர்த்திகள், சத்குரு சாய்நாதருக்கு மகா கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, மாலை, ஸ்ரீசாய் மகான் பல்லக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீசீரடி சாய்பீட அறங்காவலர் குழு, சேவையாளர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.