/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
சேவூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : நவ 19, 2024 06:23 AM

அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதற்கால யாக வேள்வி துவங்கியது.
அவிநாசி அருகே சேவூரிலுள்ள ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில், நாளை அதிகாலை 4:50 - 5:15 மணிக்குள் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, நேற்று விக்னேஸ்வர பூஜை,மிருத்சங்கிரஹணம், ஸ்ரீ ஹரிஹர பஞ்சாசனம் உள்ளிட்டவைகளுடன் முதல் கால யாக பூஜைகள் துவங்கின. இன்று, ஸ்ரீ ஹரிஹர புத்திர ஆச்சார்ய வர்ண பூஜை, ஸ்ரீஹரிஹர புத்திரனுக்குரஜதபந்தனம், எந்திர ஸ்தாபனம் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், நாளை அதிகாலை நான்காம் கால யாக யாத்ரா தானம், கடம் புறப்படுதலுடன் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மஹாபிஷேகம், மஹா தீபாராதனை, ஹரிவராசனம் ஆகியவை நடைபெறுகிறது. ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.