ADDED : ஆக 11, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னத்துார்; அவிநாசி குறுமைய அளவிலான கூடைப்பந்து போட்டி, அவிநாசி கொங்கு கல்வி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடந்தது.இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், குன்னத்துார் என்.ஆர்.கே.என்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினர், பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் சங்கர் மணிவண்ணன், தலை மையாசிரியை உஷாராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.