/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுவள கலைத்திருவிழா; இன்று துவங்குகிறது
/
குறுவள கலைத்திருவிழா; இன்று துவங்குகிறது
ADDED : அக் 13, 2024 11:41 PM
திருப்பூர்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் தரப்பில் இருந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
கலை, இலக்கியம், பேச்சு, நடனம், நடிப்பு உள்ளிட்டவற்றில் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறனை வளர்க்க 2022 முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் பிளஸ் 1 வரை பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.பள்ளி அளவிலான போட்டிகள் கடந்த ஆக., மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் அக்., 14 (இன்று) முதல், 16ம் தேதி வரை 3 நாள், குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அந்தந்த மாவட்டத்தில் நடத்தி, அக்., 17 முதல், 24ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கவுள்ள வட்டார அளவிலான போட்டிக்கு மாணவ, மாணவியரை தேர்வு செய்ய வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர் குறுவள போட்டி மற்றும் மாவட்ட போட்டிக்கு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்று பின் மாணவ, மாணவியரை அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.