sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குட்டை திடல் 10 நாட்களுக்கு ரூ. 60 லட்சத்திற்கு ஏலம்

/

 குட்டை திடல் 10 நாட்களுக்கு ரூ. 60 லட்சத்திற்கு ஏலம்

 குட்டை திடல் 10 நாட்களுக்கு ரூ. 60 லட்சத்திற்கு ஏலம்

 குட்டை திடல் 10 நாட்களுக்கு ரூ. 60 லட்சத்திற்கு ஏலம்


ADDED : மார் 17, 2026 09:23 PM

Google News

ADDED : மார் 17, 2026 09:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்காக, 10 நாட்கள் பொழுது போக்கு அம்சங்கள் அமைத்துக்கொள்ள குட்டை திடல் ஏலம் விடப்பட்டது.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, உடுமலை குட்டைத்திடலில், ராட்டிணங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள், திருவிழா கடைகள் அமைக்க, வருவாய்த்துறைக்கு சொந்தமான, 0.91 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் பயன்படுத்திக்கொள்ள, வருவாய்த்துறை சார்பில் ஏலம் விடப்படுகிறது.

நடப்பாண்டு திருவிழா, வரும் 24ல் துவங்குகிறது. தேரோட்டம் ஏப்., 9ல் நடக்கிறது. ஏப்.,11 வரை விழா நடக்க உள்ளதால், வருவாய்த்துறை சார்பில், ஒரு கோடியே, 20 லட்சத்து, 3,200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, ஏலம் நடத்தப்பட்டது.

முதல் மூன்று ஏலங்களில், சம்பந்தப்பட்ட ராட்டிணம் அமைக்கும் உரிமையாளர்கள், நாட்களை குறைத்து வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.

இதனையடுத்து, 4வது முறையாக, தாசில்தார் கவுரி சங்கர் முன்னிலையில், ஏலம் நடந்தது. இதில், ஏப்., 3ம் தேதி முதல், 12ம் தேதி வரை, 10 நாட்களுக்கு மட்டும், 60 லட்சத்து, 1,200 ரூபாய்க்கு ஏலம் இறுதி செய்யப்பட்டது.

இதனால், குட்டைத்திடலில், 10 நாட்கள் மட்டும் பொழுது போக்கு அம்சங்கள் இயக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு பொழுது போக்கு அம்சங்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கவும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும், விதிமுறைகளை முறையாக கடை பிடிக்கவும், அரசு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us