sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்வி அலுவலகத்துக்கு கட்டடம் இல்லை; இடம் ஒதுக்கினால் தீருமே தொல்லை

/

கல்வி அலுவலகத்துக்கு கட்டடம் இல்லை; இடம் ஒதுக்கினால் தீருமே தொல்லை

கல்வி அலுவலகத்துக்கு கட்டடம் இல்லை; இடம் ஒதுக்கினால் தீருமே தொல்லை

கல்வி அலுவலகத்துக்கு கட்டடம் இல்லை; இடம் ஒதுக்கினால் தீருமே தொல்லை


UPDATED : ஜன 10, 2026 08:00 AM

ADDED : ஜன 10, 2026 06:56 AM

Google News

UPDATED : ஜன 10, 2026 08:00 AM ADDED : ஜன 10, 2026 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: சுல்தான்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்துக்கு என, அலுவலகம் இல்லாத நிலையில், இடம் ஒதுக்கீடு செய்து தந்தால், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், 70க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில்,3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகள், அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவ்வாறு, சுல்தான்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்துக்கு, நிரந்தர கட்டடம் இல்லாமல், அலுவலர்கள் திண்டாடி வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

கல்வி என்பதுதான் அனைவருக்கும் அடிப்படையானது. அவ்வாறு கல்வி கற்பித்து தரும் ஆசிரியர்களின் துறை சார்ந்த வட்டார கல்வி அலுவலகத்துக்கு என, அலுவலக கட்டடம் இல்லாமல் பல ஆண்டுகளாக திண்டாடி வருகிறோம்.

கடந்த காலங்களில், வாடகை கட்டடத்தில் கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது. தொடர்ந்து, இங்குள்ள மகளிர் திட்ட அலுவலக கட்டடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

மோசமான நிலையில் இருந்த மகளிர் திட்ட அலுவலக கட்டடத்தை, ஆசிரியர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, கட்டடத்தை புதுப்பித்து, நல்ல நிலையில் கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது, மகளிர் திட்டத்துக்காக கட்டடம் வேண்டும் என்கின்றனர். கட்டடத்தை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

எத்தனையோ வட்டாரங்களில், நிரந்தர கட்டடத்தில் வட்டார கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சுல்தான்பேட்டையில் மட்டும், கட்டடம் இல்லாமல் அல்லாடி வருகிறோம். கல்வி அலுவலகத்திற்கு என இடம் ஒதுக்கீடு செய்து, அங்கு நிரந்தரமாக கட்டடத்தை கட்டித் தர வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது பயன்படுத்தி வரும் கட்டடத்தையும் காலி செய்ய வேண்டும் என்றால், நாங்கள் எங்கு செல்வது. பள்ளி வளாகங்களுக்கு உள்ளே, கல்வி அலுவலகங்கள் செயல்படக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஒரு கல்வி அலுவலகத்துக்கே இந்த அவல நிலை என்றால், இதனை எங்கு போய் சொல்வது. எனவே, கல்வி அலுவலகத்துக்காக இடம் ஒதுக்கி, நிரந்தர கட்டடத்தை உருவாக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கல்விதான் அனைவருக்கும் அடிப்படை யானது. ஆனால், கல்வி அலுவலகத்துக்கு இடம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக திண்டாடி வருகிறோம். ஒரு கல்வி அலுவலகத்துக்கே இந்த அவல நிலை என்றால் இதை எங்கு போய் சொல்வது?







      Dinamalar
      Follow us