/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அதிநவீன வாகனங்கள் இல்லை தீயணைப்பு தாமதம்; சேதம் அதிகம்'
/
'அதிநவீன வாகனங்கள் இல்லை தீயணைப்பு தாமதம்; சேதம் அதிகம்'
'அதிநவீன வாகனங்கள் இல்லை தீயணைப்பு தாமதம்; சேதம் அதிகம்'
'அதிநவீன வாகனங்கள் இல்லை தீயணைப்பு தாமதம்; சேதம் அதிகம்'
ADDED : டிச 23, 2024 04:44 AM

திருப்பூர் : திருப்பூர், மணியகாரம்பாளையத்தில் நேற்றுமுன்தினம் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தை குறிப்பிட்டு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
திருப்பூரிலுள்ள ஏற்றுமதி பின்னலாடை நிறுவனத்தில் கடந்த 21ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் பெரும் நிதி இழப்புக்குள் தள்ளப்பட்டுள்ளது.
கடுமையாக போராடி தீயை கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினரின் பணி பாராட்டத்தக்கது. திருப்பூர் மாவட்ட தீயணைப்பு நிலையங்களில், அதிக உயரம் கொண்ட தீயணைப்பு வாகனங்கள் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. அதனாலேயே, தீயணைப்பதில் தாமதம் ஏற்பட்டு, சேதம் அதிகரிக்கிறது.
திருப்பூரை பொறுத்தவரை, குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. தீவிபத்துகள் ஏற்படும்போது, உடனடியாக அணைத்து, அருகிலுள்ள நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு பரவாமல் தடுப்பது மிகவும் அவசியமாகிறது.
எனவே, திருப்பூர் தீயணைப்பு நிலையங்களுக்கு, அதிக உயரத்தில் ஏற்படும் தீயை அணைக்கும் வகையிலான, நவீன தீயணைப்பு வாகனங்களை வழங்கவேண்டும்.

