/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டை திடலில் கழிப்பிட வசதி இல்லை சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
/
குட்டை திடலில் கழிப்பிட வசதி இல்லை சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
குட்டை திடலில் கழிப்பிட வசதி இல்லை சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
குட்டை திடலில் கழிப்பிட வசதி இல்லை சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
ADDED : ஏப் 17, 2025 10:35 PM
உடுமலை, ; உடுமலை குட்டைத்திடலில், பொழுதுபோக்கு அம்சங்களில் விளையாட வரும் மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால், நுாலக சுற்றுப்பகுதி திறந்த வெளிக்கழிப்பிடமாக மாறியுள்ளது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் குட்டைத்திடலில் விளையாட்டு சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படுகிறது.
திருவிழா முடியும் வரை, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பொழுதுபோக்கு அம்சங்களை காண வருகின்றனர்.
பத்து நாட்களுக்கும் மேலாகவே, இங்கு கடைகள் மற்றும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.இவ்வாறு பலர் கூடும் பொது இடத்தில், கழிப்பிட வசதியில்லாமல் இருப்பது, அங்கு வரும் மக்களுக்கு மட்டுமின்றி, குட்டையை சுற்றியுள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
கழிப்பறை வசதியில்லாததால், நுாலகத்தின் பின்புற இடத்தை திறந்த வெளிக்கழிப்பிடமாகவே மாற்றியுள்ளனர்.
நுாலகத்தின் பின்புறம் போதிய பராமரிப்பின்றி கிடப்பதுதான் முக்கிய காரணமாக உள்ளது. தேர்த்திருவிழா நேற்று நிறைவடைந்துள்ளது. இருப்பினும், பொழுதுபோக்கு விளையாட்டுகள் இன்னும் முடியவில்லை. இதனால் குட்டைதிடலில் மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
நுாலக வளாகத்தில் நிற்கவே முடியாத வகையில் மிகுதியான துர்நாற்றம் வீசுவதால், வாசகர்கள் உள்ளே செல்லவே தயங்குகின்றனர். போட்டித்தேர்வர்கள் நுாலகத்தில் அமர்ந்து படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இன்று திருவிழாவின் முக்கிய அம்சமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்நிகழ்ச்சியை காண வருகின்றனர்.
பொதுமக்களுக்கான அடிப்படை கழிப்பறை தேவையை 'மொபைல் டாய்லெட்'கள் அமைத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

