/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லகு உத்யோக் பாரதி' மருத்துவ முகாம்கள்
/
'லகு உத்யோக் பாரதி' மருத்துவ முகாம்கள்
ADDED : ஏப் 24, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; 'லகு உத்யோக் பாரதி' நிறுவன தினம், 'ஸ்தாபன திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில், லகு உத்யோக் பாரதி துவக்க நாளையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள , 'லகு உத்யோக் பாரதி' அமைப்பின் உறுப்பினர்களின் நிறுவனங்களிலும், மருத்துவ முகாம் நடந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு, நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு, அடிப்படை மருத்துவ முகாம்கள் நடத்தி, தேவையான நபர்களுக்கு, உரிய உயர்சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக, 'லகு உத்யோக் பாரதி' திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

