/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லட்சணம்' இழந்த லட்சுமி நகர் ரோடு
/
'லட்சணம்' இழந்த லட்சுமி நகர் ரோடு
ADDED : ஏப் 16, 2025 11:06 PM

திருப்பூர்; லட்சுமி நகர் பகுதியில் உள்ள ரோடுகளை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூரில், முக்கிய வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அதிகம் உள்ள பகுதி லட்சுமி நகர். பி.என்., ரோடு, கொங்கு மெயின் ரோடு பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாகவும் இருக்கிறது.
லட்சுமி நகர் பகுதியில், பனியன் துணி விற்கும் கடைகள், பர்னிச்சர் விற்கும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், ஓட்டல்கள் அதிகம் உள்ளன. தினமும் ஏராளமானோர் இவ்வழியாக செல்கின்றனர்.
இப்பகுதியில், மாநகராட்சியின், பாதாள சாக்கடை பணிகளுக்காகவும், நான்காவது குடிநீர் திட்ட பணிகளுக்காகவும், மாறிமாறி ரோடு தோண்டப்பட்டது. ரோடுமுழுவதும் சேதமாகிவிட்டதால், ஜல்லிக்கற்கள் பரப்பி சமன் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, லட்சுமி நகர் பகுதிரோடுகள் சீரமைக்கப்படவில்லை. 'பேட்ஜ் ஒர்க்' கூட நடக்கவில்லை. இதனால், அப்பகுதியில் வாகனங்களில் சென்று வருவது கடும் சவாலாக மாறியுள்ளது. அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன.
மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் நலன் கருதி, லட்சுமி நகர் பகுதி ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.