/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
/
சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED : ஜூலை 18, 2025 11:54 PM
திருப்பூர்; ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சுக்ரீஸ்வர சுவாமி கோவிலில், திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்திலுள்ள ஸ்ரீ ஆவுடை நாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.
இந்த வழிபாட்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். திருவிளக்கு வழிபாட்டை முன்னிட்டு, சுக்ரீஸ்வர பெருமான் மற்றும் ஆவுடை நாயகி அம்மனுக்கு, 21 வகையான மூலிகை, வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு நடத்தினர். விழா நிறைவாக, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு வழிபாடு ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், செய்திருந்தனர்.