/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்
/
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்
ADDED : ஜன 26, 2025 03:37 AM

திருப்பூர்: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று திருப்பூரில் நடந்தது.
மருதாசலபுரம் மெயின் ரோட்டில் நடந்த கூட்டத்துக்கு வடக்கு மாநகர மாணவர் அணி செயலாளர் திலக்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபிநாத் வரவேற்றார். மாநகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
வடக்கு மாவட்ட தி.மு.க, செயலாளர் எம்.எல்.ஏ.,செல்வராஜ், வடக்கு நகர செயலாளர் தினேஷ்குமார், தெற்கு நகர செயலாளர் நாகராஜ், தலைமை கழக பேச்சாளர் அன்னவயல் கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தி.மு.க., துணை பொது செயலாளர் நீலகிரி எம்.பி., ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:பல்லாயிரம் ஆண்டு பெருமை வாய்ந்தது தமிழ் மொழி. இம்மொழியில் எல்லாமே உள்ளது. அதற்கு மாற்றாக ஹிந்தியை வேண்டாம் என்று எதிர்த்து, போராடி, பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இந்த போராட்டத்தால் கிடைத்த பயனைத் தான் இன்று நாம் பெற்றுள்ளோம். மொழிப் போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் தகுதி நமக்கு மட்டுமே உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.