/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெரிய பள்ளி வாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு
/
பெரிய பள்ளி வாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : மார் 10, 2024 12:07 AM
திருப்பூர்:திருப்பூரில் 200 ஆண்டு பாரம்பரியம் கொண்ட, பெரிய பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.
திருப்பூர், பெரிய கடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் 200 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. இப்பள்ளிவாசல் 1927ம் ஆண்டு முதல், 'லெப்பை சுன்னத் ஜமாஅத் மஸ்ஜித்' என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
மஸ்ஜித் நிர்வாகம் மூன்றாண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்வு நடைபெறும். ஹாஜி ஷாஜஹான் தலைமையிலான நிர்வாக குழு பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.
ஹாஜி ஜக்கரியா, ஹாஜி முஹமது சலீம், ஹாஜி பீர் முஹமது, ஹாஜி முஹமது உவைஸ், ரஹமத்துல்லா ஆகியோர் அடங்கி தேர்வுக் கமிட்டி மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரிய பள்ளிவாசல் தலைவராக அல்ஹாஜ் சிராஜ்தீன்; துணைத்தலைவர் தலைவர் ஹாஜி முஹமது மன்சூர்; செயலாளர் முஹமது உபைதுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முத்தவல்லியாக முஹமது யாக்கூப், பொருளாளராக முஹமது பாரூக், மேலாளராக முஹமது இப்ராஹிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் நிர்வாக சபை உறுப்பினர்கள் 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா, துணை செயலாளர் ரபி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

