/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆலை உரிமம் புதுப்பிப்பு ;அக்., 31ம் தேதி கடைசி நாள்
/
ஆலை உரிமம் புதுப்பிப்பு ;அக்., 31ம் தேதி கடைசி நாள்
ஆலை உரிமம் புதுப்பிப்பு ;அக்., 31ம் தேதி கடைசி நாள்
ஆலை உரிமம் புதுப்பிப்பு ;அக்., 31ம் தேதி கடைசி நாள்
ADDED : அக் 22, 2025 11:06 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகள், 2026ம் ஆண் டுக்கான தொழிற்சாலை உரிமத்தை வரும் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகம்தெரிவித்துள்ளது.
இதன் இணை இயக்குனர் - 1 வேலுமணி, இணை இயக்குனர் - 2 சபீனா ஆகியோரது அறிக்கை:
புதுப்பித்தலுக்காக திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் 1, 2 அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டியதில்லை.
தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க https.//dish.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியில் உரிய கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம், உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம். உரிமம் திருத்தம், மாற்றம் ஆகியவற்றுக்கு இத்துறையின் இணையவழி மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இதேபோல் ஒப்பந்த, வெளிமாநில தொழிலாளர் சட்டத்தின் கீழ் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்ததாரர்கள் இணையதளம் மூலம் உரிய கட்டணம் செலத்தி தங்கள் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணையதளத்தில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்கள் தொழிற்சாலை தகவல்களை உள்ளீடு செய்து உரிமம் புதுப்பிக்க வேண்டும்.
இவற்றை வரும் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் உரிய தாமதக்கட்டணம் பொருந்தும். உரிய உரிமமின்றி செயல்படும் தொழிற்சாலைகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டவை.
இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் இணை இயக்குனர் 1 அலுவலகம், தொலைபேசி எண்: 0421-2470483 மற்றும் இணை இயக்குனர் 2 அலுவலகம், தொலைபேசி எண்: 0421-2230688 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

