/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் சட்ட கல்லுாரி எம்.எல்.ஏ., கேள்வி
/
திருப்பூரில் சட்ட கல்லுாரி எம்.எல்.ஏ., கேள்வி
ADDED : மார் 22, 2025 06:45 AM
திருப்பூர் : நிதி நிலையைப் பொறுத்து திருப்பூரில் சட் டக் கல்லுாரி அமைக்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், சட்டசபையில் நேற்று ஒரு கேள்வி எழுப்பினார். திருப்பூர் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லுாரி இல்லை.
இதனால், சட்டம் பயில விரும்புவோர் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இங்கு சட்டக் கல்லுாரி அமைக்கப்படுமா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''திருப்பூரில் சட்டக்கல்லுாரி அமைக்கும் செயற்குறிப்பு அரசு தரப்பில் பரிசீலனையின் உள்ளது. இருப்பினும் நிதி நிலைக்கேற்ப முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.