/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு
/
வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு
ADDED : செப் 07, 2025 10:37 PM
திருப்பூர்; வக்கீல்கள் சேம நல நிதியை 10 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்; மூன்றாண்டுகளுக்கும் குறைவான சிறைத் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகள், மூன்றாண்டுகளுக்கு மேல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை முறையான விசாரணை இன்றி தீர்ப்புகளை வழங்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியதை திரும்பப் பெற வேண்டும்.
கோர்ட்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை வக்கீல்களிடமிருந்து பறிக்கும் வகையிலும் வக்கீல் சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தும் வகையிலும் மதுரை ஐகோர்ட் கிளை வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (8ம் தேதி) கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட, தமிழ்நாடு - புதுச்சேரி வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வக்கீல் சங்கங்களும் இப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.