/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு; வழக்கு விசாரணைக்கு 'வாய்தா'
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு; வழக்கு விசாரணைக்கு 'வாய்தா'
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு; வழக்கு விசாரணைக்கு 'வாய்தா'
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு; வழக்கு விசாரணைக்கு 'வாய்தா'
ADDED : செப் 08, 2025 11:23 PM
திருப்பூர்; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடக் கூடாது என்ற மதுரை ஐகோர்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சேம நல நிதியை, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், மூன்றாண்டுக்கு குறைவான சிறைத் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகள், மூன்றாண்டுக்கு மேல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை முறையான விசாரணை இன்றி தீர்ப்பு வழங்குவது குறித்தும், வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது என்ற கோர்ட் உத்தரவுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தியும், கோர்ட்களில் காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும், வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் உள்ளிட்ட அனைத்து தாலுகா பகுதி கோர்ட்களிலும் வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் அலுவலர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.
நேற்று விசாரணைக்கு வந்த ஜாமின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. பிற வழக்குகள் வேறு தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டன.