/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துப்பாக்கி உரிமம் வேண்டும் கலெக்டரிடம் வக்கீல்கள் மனு
/
துப்பாக்கி உரிமம் வேண்டும் கலெக்டரிடம் வக்கீல்கள் மனு
துப்பாக்கி உரிமம் வேண்டும் கலெக்டரிடம் வக்கீல்கள் மனு
துப்பாக்கி உரிமம் வேண்டும் கலெக்டரிடம் வக்கீல்கள் மனு
ADDED : நவ 24, 2024 03:55 AM
திருப்பூர்: உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதால், வக்கீல்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்க இணை செயலாளர் சரவணகுமார் தலைமையில் வக்கீல்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வக்கீல்களாக பணியாற்றுகிறோம். கடந்த, 10 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். வக்கீல்கள் அதிகளவில் கொலை செய்யப்படுவதும், இதனை கண்டித்து கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடப்பதும் தமிழகத்தில் தான் அதிகளவில் நடக்கிறது. தமிழக அரசு, போலீஸ், அரசியல் அமைப்புகள் அனைத்தும் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
வக்கீல்கள் தங்கள் தொழிலையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்த காரணத்துக்காக கொலை நடந்தாலும், பலியானது வக்கீல் என்பதால், அவரை தொழில் ரீதியாக கொலை செய்யப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. வக்கீல்கள் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.